சாம்பல் புதனை கறைபடிய செய்யதீர்கள் – பிலிப்பீன்ஸ் அரசியல்வாதிகளுக்கு கோரிக்கை


வரும் மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தவக்காலத்தின் தொடக்க நாளாம் சாம்பல் புதன்கிழமை சடங்குகளை தங்களின் அரசியல் பரப்புரையை நிறைவேற்றும் நாளாக கறைபடிய செய்ய வேண்டாம் என்று பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் அதிகாரி ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.

 

தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல் புதன்கிழமை செபத்தின், உண்ணாநோன்பின், மனம் திரும்புதலின் நாளாகும்.

 

இந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி இந்த நாள் வருகிறது. இந்த நாளும், புனித வாரமும் பிலிப்பீன்ஸின் தேர்தல் காலத்தின் நடுவில் வருகிறது.

 

முன்தைய அரசியல்வாதிகள் மத சடங்கில் பங்குபெறுவதை தங்களின் புகைப்படங்களை பரவல் செய்கின்ற தளமாக பயன்படுத்தியுள்ளனர் என்று சமூக சேவை செயலகதின் செயலதிகாரி அருட்தந்தை எட்வின் காரிகுஸ் தெரிவித்திருக்கிறார்.   

 

வரயிருக்கும் தேர்தலில் போட்டியிடுவோர், தாங்கள் கடவுளுக்கு ஆதரவாக உள்ளவர்கள் என்பதை காட்டுவதற்கு இந்த தவக்காலத்தையும், சாம்பல் புதன்கிழமை சடங்கையும் பயன்படுத்தி கொள்ள முனைவர் என்று இந்த அருட்தந்தை கூறியுள்ளார்.

 

புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நெற்றியில் சாம்பலை பூசிக்கொள்ள வேண்டாம். நெற்றியில் சாம்பல் பூசுவது நமது பாவங்களில் இருந்து மனம்திரும்ப வேண்டும் என்பதை நமக்கு நினைவட்டவே என்று இந்த அருட்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

Add new comment

2 + 3 =