ராணுவ சீருடையில் டெல்லி பாஜக தலைவர் பிரசாரத்தால் சர்ச்சை


ராணுவ சீருடை அணிந்துகொண்டு, பாஜக தலைவர் டெல்லியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

மக்களவைத் தேர்தல் வர இருப்பதால், எல்லா அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பரப்புரை செய்ய தொடங்கியுள்ளன.

 

பாஜக சார்பில் யமுனா விஹார் பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியிpல், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், டெல்லி மாநிலத் தலைவருமான மனோஜ் திவாரி ராணுவத்தின் சீருடையோடு கலந்துகொண்டார்.

 

தற்போது எழந்துள்ள ராணுவ அனுதாபத்தை வாங்கு வங்கியாக மாற்ற முனைந்து ராணுவத்தை அவமதித்து விட்டதாகவும்,  சட்டத்தை மீறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

 

ஆனால், தேசப்பற்றை வெளிப்படுத்தவே இவ்வாறு செய்ததாக மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

 

பாஜகவினரும், மோடியும், அமித் ஷாவும் ராணுவ வீரர்களை அரசியலுக்குப் பயன்படுத்துவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Add new comment

1 + 0 =