பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்த கூறி அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆாப்பாட்டம்


தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதை நிறுத்த வேண்டுமென கோரி அமெரிக்க வாழ் இந்தியர்கள் நியூயார்க்கில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

 

காஷ்மீரிவுள்ள புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் அருகே உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத பயிற்சி முகாம்களை இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த 26-ம் தேதி அதிகாலையில் குண்டு வீசி அழித்தன.

 

பாகிஸ்தானின் நிதி மற்றும் பிற ஆதரவுடனே  ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

 

இதiனை ஏற்றுக்கொள்ளாத பாகிஸ்தான், ஆதாரங்களைக் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிவருகிறது.

 

இந்நிலையில், ஜெய்ஷ் இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது குரேஷி ஒப்புக் கொண்டுள்ளார்.

 

பாகிஸ்தான் தீவிரவாத்திற்கு தொடர் ஆதரவு வழங்கி வருவதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

 

இந்த பின்னணியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இந்த போராட்டத்தை நியூ யார்க்கில் ஞாயிற்றுக்கிழமை நடத்தியுள்ளனர்.

 

பதாகைகளை ஏந்தி, தீவிரவாதத்துக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.

Add new comment

1 + 0 =