இந்திய திருச்சபைக்கு தூண்தல் அளிக்கும் பத்தாண்டுகளான கிறிஸ்தவ எதிர்ப்பு கலவரம்


கிறிஸ்துவில் கொண்டு இறைநம்பிக்கையால், தனது கணவர், தன்னுடைய மற்றும் இரண்டு மகள்களின் கண்முன்னாலேயே எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை விவரித்த கனகரேகா நாயக், அந்த பயங்கர காட்சியை அப்போது கண்முன்னே பார்த்ததுபோல அச்சத்துடன் அமைதியானார்.

 

கண்ணீரை துடைத்துவிட்டு, சற்று இருமிய பின்னர், அமைதியான குரலில், அவர்களை மன்னிக்க வேண்டிவிட்டு, காட்டில் மறைந்து கொண்டோம் என்று அவர் தெரிவித்தார்.

 

2008ம் ஆண்டு கிறிஸ்தவ எதிர்ப்பு கலவரத்தில் இத்தகைய துயரங்களை அனுபவித்தவர்களிடம் இருந்து செவிமடுக்க ஆயிரம் கிறிஸ்தவர்கள் குழுமியிருந்த கூட்டத்தில் கனகரேகா நாயக் இதனை தெரிவித்தார்.

 

இந்திய வரலாற்றில் இந்த கலவரம் நிகழ்ந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியா முழுவதிலும் பெரியதொரு சாட்சிகளாகவும், சக்தியை தருக்கின்ற தூண்டுதலாகவும் இருந்து வருவதாக பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்சபை தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கிறிஸ்தவர்கள் தங்களின் இறைநம்பிக்கைக்காக இறக்கிறபோது, அவர்களின் மறைசாட்சியத்தை விதைபோல திருச்சபை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது என்று பெங்களூரு உயர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் மசாடோ கூறியுள்ளார்.

 

இறையியல் மற்றும் விவிலியத்தால் சாதிப்பதைவிட மறைசாட்சியம் விரைவாக இறைநம்பிக்கையை வளர்க்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

 

கனகரோக நாயக்கின் கணவர் பாரிக்கிட் நாயக்கின் வாழ்க்கையும், இறப்பும் பிறருக்கு தூண்டுதல் தருக்கின்ற ஒன்றாக அமைதிருக்கும் என்று அவர் பேசியுள்ளார்.  

Add new comment

9 + 3 =