தலித், பழங்குடியின மக்களின் பேராட்டத்திற்கு ராகுல் ஆதரவு


காடுகளின் உரிமை மற்றும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராடும் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் பேராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

செவ்வாய்க்கிழமை தலித் மற்றும் பழங்குடியின மக்கள் நடத்திய போராட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

இந்த மத ஆதரவு அரசாக செயல்படும் நரேந்திர மோடி அரசு, பழங்குடியினருக்கு காடுகளில் இருக்கின்ற உரிமைகளை வழங்கவும், ஆசிரியர்களுக்கு வேலை பாதுகாப்பு வழங்கவும் வேண்டி இந்த போராட்டத்தை இவர்கள் நடத்தியுள்ளனர்.

 

போலியான வாக்குறுதிகளை வழங்கி, தலித் மக்களையும், பழங்குடியின மக்களையும் துன்பத்தில் தள்ளியதோடு, தெருவில் இறங்கி போராடவும் இந்திய தலைமையமைச்சர் மோடி அவர்களை கட்டாயப்படுத்தியுள்ளதாக ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

நமது பழங்குடியின மற்றும் தலித் மக்கள் துன்பத்தில் உள்ளனர். அவர்களுக்கு காடுகளில் இருக்கின்ற உரிமைகளும், வாழ்வுரிமைகளும் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. அரசியல் சாசனத்திற்கு எதிராக அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

 

இந்த மக்களின் போராட்டம் பல அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்றிருந்தன.

Add new comment

6 + 12 =