தீய நோக்கங்களோடு குடியேறிகளின் பெயர் மாற்றும் செயல்பாடு


போர்ச்சிகீசிய கிறிஸ்தவ மற்றும் குடும்ப பெயர்களை சூட்ட விரும்பி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர் அல்லாத குடியேறிகள் முன்னாள் போர்ச்சிகீசிய காலனியாக விளங்கிய கோவாவுக்கு ஆண்டுதோறும் செல்கின்றனர்.

 

இந்த பெயர் மாற்றுவதற்கான ஆவல், கோவாவின் முற்கால பரம்பரையை சேர்ந்தவர்கள் என்று போலியாக சொல்லிக்கொண்டு கோவா மக்கள் அனுபவித்து வருகின்ற உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக்கொள்வதற்கு மேற்கொள்ளப்படுவதாக சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

 

கோவாவின் நிலங்களை அபகரித்துக்கொள்வதற்கு தீய நோக்கத்தோடு செய்யப்படுவதுதான் பெயர் மாற்றும் செயல்பாடு என்று  சந்தேகப்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸியோ ரெஜினால்டு லௌரென்கோ தெரிவித்திருக்கிறார்.

 

இவ்வாறு பெயர் மாற்றுவது அரசு வேலைகளை பெறுவதற்கோ, சமூக நலவாழ்வு பயன்களை பெற்றுக்கொள்ளவோ அல்ல என்கிற ஐயம் இப்போது மக்களிடம் எழுந்துள்ளது.

 

இந்த ஊழலில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று இந்த மாநிலத்தை ஆளுகின்ற இந்து மத ஆதரவு பாரதிய ஜனதா கட்சி ஆளும் அரசை சுட்டிக்காட்டி அவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

 

கோவாவில் பிறந்திருந்தால் மட்டுமே, பெயர்களும், குடும்ப பெயர்களும் மாற்றலாம் என்று இந்த மாநிலத்திலுள்ள பெயர் மற்றும் குடும்ப பெயர் மாற்றும் சட்டம் குறிப்பிடுகிறது.

 

மாநில பாதிவாளருக்கு பெயரை மாற்ற விண்ணப்பம் வழங்க வேண்டும். இந்த மாற்றத்தை வழங்குவதற்கு முன்னால் அவர் இந்த மனுவை பரிசீலனை செய்வார்.

 

உள்ளூர் செய்தித்தாளில் இவ்வாறு பெயர் மாற்றப்பட இருப்பதையும், முகவரியையும் அச்சிட்டு தெரிவிக்க வேண்டும் என பல நடைமுறைகள் இதற்கு உள்ளன.

 

கோவாவில் பிறக்காதவர்களின் பெயரையும், குடும்ப பெயரையும் மாற்றுவது சட்டத்திற்கு புறம்பானது என்கிறார் மாநில பதிவாளர் அஷூடோஸ் அப்டெ.

 

அரசு தரவுகளை மேற்கோள்காட்டி ஒவ்வோர் ஆண்டும் சுமார் 500 பேர் தங்களின் பெயர்களை, குடும்ப பெயரை அல்லது இரண்டையும் மாற்றுவதாக உள்ளூர் செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது.

Add new comment

7 + 9 =