அமைதிக்கான விருது பற்றி இம்ரான் கருத்து


அமைதிக்கான நோபல் விருதுக்கு தகுதியான ஆள் தானில்லை என்று பாகிஸ்தான் தலைமையமைச்சர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகாஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது.

 

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை துரத்திச் சென்று தாக்க முயன்றபோது, இந்திய விமானி அபிநந்தனின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.

 

பதற்றம் அதிகரித்த நிலையில், அபிநந்தனை இந்தியாவுக்கு கொண்டு வர கோரிக்கைகள் எழந்தன.

 

அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் விடுவிப்பதாக இம்ரான் கான் நாடாளமன்றத்தில் தெரிவித்தார்.

 

அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், . இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் விருது வழங்க வேண்டுமென பாகிஸ்தானியர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வந்தனர்.

 

காஷ்மீர் பிரச்னையை யார் தீர்க்கிறார்களோ அவர்களே அமைதிக்கான நோபல் விருதுக்கு தகுதியானவர்கள் என இத்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார்.

Add new comment

4 + 3 =