தவக்காலம் வீணாக போய்விட அனுமதிக்க வேண்டாம் – திருத்தந்தை


தவக்காலம் கடவுளோடும், பிறரோடு, இயற்கையோடும் இருக்கும் முடிறிவுகளை கத்தோலிக்கர்களுக்கு நினைவூட்டும் தருணம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்து்ளளார்.

 

கடவுளின் குழந்தைகளாக வாழாமல் இருப்பது பாவங்களை செய்தவற்கான பாதையை வழங்குகிறது. இதனால் பேராசை, தேவையற்ற சொகுசு மனப்பான்மை, தன்னைபோல பிறர் பெற வேண்டிய நன்மைகளில் கவனம் கொள்ளாமை ஆகியவற்றால் பாவங்கள் உருவாகிறது.

 

மார்ச் 6ம் தேதி தவக்காலத்தை தொடங்கும் கத்தோலிக்கருக்கும் இந்த செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கியுள்ளார்.

 

உயிர்ப்புக்கான உலகத்தில், உயிர்ப்பை நோக்கி தொடர்ந்து நாம் சாயாவிட்டால், எனக்கு எல்லாம் வேண்டும், அது இப்போது உடனடியாக வேண்டும், அதிகம் வேண்டும், ஒருபோதும் போதாது ஆகிய உணர்வுகள்தான் மேலோங்கும்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்து்ளளார்.

 

திருத்தந்தை பிரான்சிஸின் இந்த தவக்கால செய்தி பிப்ரவரி 26ம் தேதி வத்திக்கானில் வெளியிடப்பட்டது.

 

இந்த தவக்காலத்தை வீணாக கழித்துவிட வேண்டாம் என்று திருத்தந்தை கத்தோலிக்கர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Add new comment

1 + 4 =