போர் மனப்பான்மையை எதிர்க்கும் பாகி்ஸ்தான் திருச்சபை


இந்தியாவின் நிர்வாகத்திலுள்ள காஷ்மீர் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகளின் அதிகரிப்புக்கு எதிராக லாகூரில் கத்தோலிக்க குழுக்கள் போராட்டம் நடத்தியுள்ளன.

 

“நாம் போரை முடிவுக்கு கொண்டு வராவிட்டால், போர் நம்மை முடிவு்ககு கொண்டு வரும்” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக்கொண்டு லாகூர் செய்தி மன்றத்திற்கு முன்னால், நீதி மற்றும் அமைதிக்கான தேசிய ஆணையத்தின் ஊழியர்கள் மற்றும் பாகிஸ்தான் கத்தோலிக்க திருச்சபையின் மனித உரிமைகள் அமைப்பு போராட்டம் நடத்தின.

 

கிறி்தவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்பட அமைதியை விரும்புகின்ற செயற்பாட்டாளர்கள் போர் மனநிலைக்கும், குண்டுவெடிப்புகளுக்கும் எதிராக இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

 

இஸ்லாமாபாத்திலும், கராச்சியிலும் ஒரே நேரத்தில் இந்த போராட்டங்கள் இடம்பெற்றன.

 

இந்திய துணை ராணுவப்படையின் 40 பேர் கொல்லப்பட்ட பின்னர், பதற்றம் அதிகமாகி, அணு ஆயுத நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் வான் தாக்குதல் நடத்தின.

 

கடந்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி நடத்திய தாக்குதலை தாங்களே நடத்தியதாக “முகமதுவின் படை” என்று பொருள்படும் ஜெய்ஷ் இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

 

லாகூர் செய்தி மன்றத்தில் நடைபெற்ற பல்சமய செய்தியாளர் சந்திப்பில் பாகிஸ்தான் படையினர் தெரிவித்த கருத்தோடு இணக்கத்தை தெரிவித்த லாகூர் உயர் மறைமாவட்ட பேராயர் செபாஸ்டின் ஷா, எல்லா பிரச்சனைகளும் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் தீர்க்கப்பட வேண்டும். போர் ஒரு தெரிவாக இருக்க கூடாது என்று தெரிவித்தார்.

 

பாகிஸ்தான் கொடியை ஏந்திக்கொண்டு, இந்த பேராயரும், அருட்தந்தையரும் அமைதிக்காவும் செபித்துள்ளனர்.

Add new comment

6 + 10 =