அரசியல் சாசன மதிப்பீடுகளை பாதுகாக்க உறுதிபூண்ட துறவற மன்றம்


இந்திய அரசியல் சாசனம் மற்றும் விவிலிய மதிப்பீடுகளை பாதுகாப்பதற்கு நீதி மற்றும் அமைதிககான துறவற மன்ற உறுப்பினாகள் உறுதிபூண்டுள்ளனர்.

 

நீதியும், அமைதியும் நிறைந்த திருச்சபையையும், நாட்டையும் உருவாக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

“இந்திய அரசியல் சாசனத்தின் பாதுகாப்பில்” என்ற தலைப்பில் கௌஹாத்தியில் நடைபெற்ற தேசிய பயிலரங்கில் கலந்துகொண்ட 60 பேர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

 

இன்று திருச்சபையிலும், இந்திய நாட்டிலும் நடைபெறும் நிலவரங்களின் பின்னணியில், இந்த காலத்தில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஆரோக்கியமான முறையில் பதிலளிப்பதை தவிர வேறு தெரிவுகள் இல்லை என்று இந்த உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இன்றைய காலத்தில் நிஜமாகியுள்ள மத அடிப்படைவாதம், குழுமங்களுக்கு ஆதரவான மற்றும் மக்களுக்கு எதிரான பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக, இந்திய அரசியல் சாசனத்தில் காணப்படும் மதிப்பீடுகளை மறுசிந்தனை செய்ய இந்த பயிலரங்கம் உதவியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த பயிலரங்கத்திற்கு பின்னர் வெளியிட்ட கூட்டறிக்கையில் இது பற்றி அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Add new comment

1 + 5 =