கடவுளின் கோபம் அவரது இரக்கத்தை போல வலிமையானது – திருத்தந்தை


கிறி்தவர்கள் கடவுளின் மன்னிப்பை தங்களின் ஆதாயமாக கருதி சுயநலத்தோடு பாவத்திற்கு மேல் பாவங்கள் செய்து கொண்டிருக்க கூடாது. தங்களின் பாவ பாதையை மாற்றிவிட மறுப்போருக்கு கடவுளின் கோபம், அவரது இரக்கம் எவ்வளவு வலிமையானதாக இருக்கிறதோ அதே போல வலிமையானதாக இருக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் காலை திருப்பலியின் மறையுரையில் தெரிவித்திருக்கிறார்.

 

கடவுளின் இரக்கம் மிகவும் சிறந்தது. அவர் எனது பாவங்களை எல்லாம் மன்னிப்பார் என்று சொல்லி கொண்டு நான் விரும்புவதை எல்லாம் செய்வேன் என்று எ்ண்ணிவிட வேண்டாம் என்று டோமுஸ் சாந்தே மார்த்தே சிற்றாலயத்தில் காலை திருப்பிலியில் திருத்த்நதை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

ஒவ்வொரு நாளின் இறுதியிலும், ஒவ்வொரு கிறிஸ்தவனும் அன்றைய நாளில் செய்தவை பற்றி சுய சிந்தனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

அப்போது நாம் தோல்வியடைந்த செயல்பாடுகள், கிறிஸ்துவுக்கு நெருக்கமாக இருந்து செயல்பட்டுள்ள தருணங்களை சிந்தித்து உறுதி செய்து கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

 

இத்தகைய சுயசிந்தனை அடுத்து நமது வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமையும்.  

Add new comment

2 + 0 =