ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல் – 25 ராணுவத்தினர் பலி


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 25 ராணுவத்தினர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆப்கானிஸ்தானின் தென் பகுதியிலுள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் ஆப்கன் ராணுவத் தளத்தில் வெள்ளிக்கிழமை தலிபான்கள்  நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 25 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

 

பாதுகாப்புப் படையினருக்கும், தலிபான்களுக்கும் இடையே தாக்குதல் தொடர்ந்து வரவதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

பேச்சுவார்த்தைக்கு உடன்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ள நிலையில், இந்தத் தாக்குதலை நடத்தப்பட்டுள்ளது.

 

ஆப்கானிஸ்தான் அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கக் கூட்டுப் படை ஆப்கனில் முகாமிட்டுள்ளது.

Add new comment

4 + 15 =