இரண்டு முறை நேரம் மாற்றி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைப்பு


இந்திய விமானி அபிநந்தன் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் வாகா எல்லை வழியாக இந்தியாவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

வெள்ளிக்கிழமை மாலை அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தான் இரண்டு முறை நேரத்தை மாற்றி அறிவித்தது.

 

கடைசியாக, இரவு 9.30 மணியளவில் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்க்பபட்டார்.

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் கடந்த புதன்கிழமை நடந்த விமான தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது.

 

விமானி அபிநந்தனை இந்தியாவுக்கு பத்திரமாக அழைத்துவர வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல்கள் எழுந்தன.

 

இதனிடையே வியாழக்கிழமை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பேசிய தலைமையமைச்சர் இம்ரான் கான், 'அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படுவார் என்று அறிவித்தார்.

 

அபிநந்தனின் குடும்பம் 3 தலைமுறையாக, ராணுவத்தில் இருந்துள்ளது.

 

அபிநந்தனின் தாத்தா சிம்மகுட்டி, இரண்டாவது உலகப்போரில் பணியாற்றி, உயிர்த் தியாகம் செய்துள்ளார். தந்தை வர்த்தமான், கார்கில் போரில் பணியாற்றியவர்.

 

தற்போது, அபிந்தன் நாட்டுக்காக மிகப்பெரிய சேவையாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

3 + 0 =