காடுகளில் இருந்து வெளியேற்றம் - அஞ்சும் இந்திய பழங்குடியினர்


திருச்சபை தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கும் நீதிமன்ற ஆணையை தொடர்ந்து, தங்களுடைய சொந்த வாழிடங்களில் இருந்து வெளியேற்றப்படும் அபாயத்தை மில்லியன்கணக்கான இந்திய பழங்குடியினர் எதிர்கொண்டு வருகின்றனர்.

 

காட்டு நிலங்களில் வாழ்கின்ற மக்களை இந்தியாவில் 21 மாநிலங்களில் இருந்து வெளியேற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

 

2006ம் ஆண்டு சட்டப்படி, இந்த நிலங்களை சொந்தம் கொண்டாடும் மற்றும் உரிமை கொண்டாடும் பயனாளர்களின் உரிமைகள் நிராகரிக்கப்பட்டு்ளளதை சுட்டிக்காட்டி இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆணையால் மில்லியன்கணக்கான பழங்குடியின மக்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளதால் கவலை அடைந்துள்ளதாக இந்திய கத்தோலிக்க ஆயர்களின் பழங்குடியின ம்ககளுக்கான அலுவலகத்தின் தலைவர் ஆயர் வின்சென்ட் பார்வா கூறியுள்ளார்.

 

வெளியேற்றப்பட்டால், பழங்குடியினருக்கு செல்ல வேறிடம் இல்லை. அவர்களுடைய இயற்கையான வாழிடமான  காடுகளுக்கு வெளியே அவர்களால் வாழ முடியாது என்று இந்த ஆயர் குறிப்பிடுகிறார்.

 

இந்த தீர்ப்பில் மனிதநேயமே இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

 

இதற்கு முன்னதாக, 2016ம் ஆண்டு ஜனவரி மற்றும் 2018 மார்ச் மாதம் வழங்கிய ஆணைகளை உறுதிசெய்து பிப்ரவரி 13ம் தேதி இந்த ஆணையை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Add new comment

3 + 2 =