பிடிப்பட்ட இந்திய படைவீரரை விடுவிப்பதாக பாகி்ஸ்தான் அறிவிப்பு


அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் வர்தமானை நாளை வெள்ளிக்கிழமை விடுவிக்கப்போவதாக பாகிஸ்தான் தலைமையமைச்சர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

 

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது.

 

அதற்குப் பதிலடியாக புதன்கிழமை, இந்திய எல்லையில் தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டது. பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

 

அந்த விமானத்தில் இருந்த தமிழக விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.

 

விமானி அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை வைத்தது.

 

இருநாடுகள் இடையே ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் விதமாக  அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் அறிக்கைகளை வெளியிட்டன.

 

இந்நிலையில், அபிநந்தன் விடுவிக்கப்படும் அறிவிப்பு வந்துள்ளது.

 

பாகிஸ்தான் மலைமையமைச்சர் இம்ரான் கானின் அறிவிப்புக்கு எல்லா தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

பாகிஸ்தானில் விடுதலை செய்யப்படும் இந்திய விமானி அபிநந்தனை வரவேற்க அவரது பெற்றோர் டெல்லி புறப்பட்டுள்ளனர்.

Add new comment

16 + 2 =