புல்வாமா தாக்குதல்: உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினருக்கு பணி நியமண ஆணை


புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.

 

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதி கடந்த 14ந்தேதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 46 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர்.

 

தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் ஆகிய 2 தமிழர்களும் இதில் கொல்லப்பட்டனர்.

 

இவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம்  நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இரங்கலும் தெரிவித்தார்.

 

இவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

 

அதன்படி உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் பழனிசாமி வழங்கியுள்ளார்.

Add new comment

1 + 8 =