பயங்கரவாதத்தை எதிர்த்து போராட சீனாவும், ரஷ்யாவும் உறுதி


பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் அனுமதிக்க மாட்டோம். அதற்கு எதிராக ஒன்றாக போராடுவோம் என்று இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.

 

சீனாவின் கிழக்கில் அமைந்துள்ள வூசான் நகரில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.

 

ரஷ்யா, சீன, இந்தியா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர்.

 

அவர்கள் மூவரும் சேர்ந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நெருங்கிய திட்டமிடலுடன் கூடிய ஒத்துழைப்பு மற்றும் செயல்பாடு முக்கியப் பங்காற்றுவதையும், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை வேறோடு அழிப்பதே முதன்மையான நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add new comment

6 + 7 =