சட்டபூர்வமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வியட்நாம் செயற்பாட்டாளர்


காவல்துறையின் போராட்ட தடுப்ப நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் வியட்நாம் பெண்ணொருவரின் கணவர் ஆறு மாதங்களாக சட்டபர்வமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

 

சர்ச்சைக்குரிய சட்டங்களை நிறைவேற்றிய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்று கைதாகியுள்ள இவர், தன்னை சிறையில் இருந்து விடுதலை செய்ய பொது மக்களின் ஆதரவை கோரியுள்ளார்.

 

லெ தி கான்க் என்பவரின் கணவரான தரென் தான்க் புரோங் என்பவர் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் கடந்த ஆறு மாதங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

 

கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி தங்களின் வீட்டுக்கு வந்த காவல்துறையினர் தனிப்பட்ட ஆவணங்களை சோதித்து பார்த்த பின்னர், காவல்துறையினரின் பாதுகாவலோடு தனது கணவைரை தான் மாவட்டத்திலுள்ள ஹோ ச்சி மின்க் நகரிலுள்ள பின்க் ஹூங ஹோயா வார்டு தலைமையகத்திற்கு அழைத்துசென்றுவிட்டதாக மனைவி கூறுகிறார்.

 

செப்டம்பர் 4ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த பேரணிக்கு சற்று முன்னதாக புயோங் கைது செய்யப்பட்தாக கான்க் தெரிவித்தார்.

 

ஜூன் 10ம் தேதி கத்தோலிக்கர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் நடத்திய பேரணியில் இவரது கணவரும் பங்கேற்றிருந்தார்.

 

இந்த பேரணி நாட்டில் புதிதாக நிறைவேற்றப்பட்டிருந்த சைபர் பாதுகாப்பு சட்டத்திற்கும், சீன முதலீட்டாளர்களால் கட்டுப்படுத்தப்படும் என்று மக்கள் அஞ்சுகின்ற மூன்று சிறப்பு பொருளாதார மண்டலங்களை நிறுவுகின்ற சாச்சைக்குரிய மசோதாவையும் எதிர்த்து நடத்தப்பட்டது.

 

காவல்துதுறையின் தலைமையகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கணவருக்கு தினமும் உணவு வழங்க வேண்டியிருந்தது என்று கான்க் தெரிவித்தார்.

 

பின்னர், புயோங் மாவட்ட காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு பின்க தான்க் மாவட்டத்திலுள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது என்றும் கான்க் கூறுகிறார்.

 

இரண்டு குழந்தைகளின் தாயான இவருக்கு கணவர் பற்றிய எந்தவொரு தகவலும் வழங்கப்படவில்லை.

 

நீதிமன்ற விசாரணகை்கு உட்படுத்தாமல், நீண்ட காலமாக சட்டபூர்வமற்ற முறையில் கைது செய்து வைத்திருப்பதன் மூலம் காவல்துறை சட்டத்தை மீறி செயல்படுவதாக கான்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

கான்குவும், அவரது மகள்களும் வெளியிட்டுள்ள காணொளியில், தந்தையின் கைது பற்றி தெரித்திருக்கும் அவர்கள், அவரை விடுவிக்க மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தனது கணவருக்காக வாதாட ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ள கான்க், இந்த வழக்கறிஞர் தனது கணவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

Add new comment

6 + 11 =