80வது பிறந்த நாளில் இறுதிச்சடங்கு நிறைவேற்றப்பட்ட மிண்டனாவோ ஆயர்


பிலிப்பின்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மார்பெல் மறைமாவட்டத்தில் 80வது பிறந்த நாளில் நடைபெற்ற அந்த மறைமாவட்ட ஓய்வுபெற்றிருந்த ஆயரின் இறுதி சடங்கில் நூற்றுக்காணக்கானோர் கலந்து கொண்டனர்.

 

சுற்றுச்சூழல் ஆர்வலரும், பெரிய சுரங்க செல்பாடுகளுக்கு எதிரானவருமான மார்பெல் மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற ஆயர் டினுயல்டோ குற்றிரெஸ் 79வது வயதில் பிப்ரவரி 10ம் தேதி காலமானார்.

 

  

80வது வயது பிறந்த நாளான பிப்ரவரி 20ம் தேதி அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.

 

கோரோனாடாலில் அமைந்துள்ள புனித பதுவை அந்தோணியார் பங்கின் கிறிஸ்து அரசர் பேராயலத்தின் பின்னால் இந்த ஆயர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

கிறிஸ்துவை போல ஆயர் குற்றிரெஸூம் நல்ல ஆயனாக இருந்தார். அவரது இழப்பை நமது வாழ்வில் உணர்வோம். ஆனால், அவர் பற்றிய நினைவுகள் நமது இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும் என்று இந்த மறைமவாட்டத்தின் குருகுல முதல்வர் மறையுரையில் தெரிவித்துள்ளார்.

 

1982ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி நியமிக்கப்பட்ட ஆயர் குற்றிரெஸ் 35 ஆண்டுகளாக மார்பெல் மறைமாவட்டத்தில் மேய்ப்புப்பணி புரிந்தார்.

Add new comment

1 + 3 =