தென் கொரியாவின் முதலாவது கர்தினாலை நினைவுக்கூரும் மூவாயிரம் கத்தோலிக்கர்கள்


மிகவும் மரியாதைக்குரிய ஆன்மிக தலைவரான தென் கொரியாவின் முதலாவது கர்தினால் இறந்து 10வது ஆண்டு நினைவை அனுசரிக்க மியோங்தொங் பேராலயத்தில் மூவாயிரம் மக்கள் கூடினர்.   

 

கர்தினால் ஆன்ட்ரூ யோம் சூ-ஜூங் தலைமையில் பல ஆயர்கள் மற்றும் அருட்தந்தையர் பங்கேற்ற நினைவு திருப்பலி கர்தினால் ஸ்டீபன் கிம் சௌ-குவானுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

 

நினைவு நிகழ்வில் தென் கொரிய பாப்பிறை தூதர் பேராயர் ஆல்பிரட் சுயெரிப் மற்றும் கொரிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் பேராயர் கைஜினுஸ் கிம் ஹீ-ஜூங் ஆகியோர் உரையாற்றினர்.

 

தென் கொரிய அதிபர் மூன் ஜியே-இன் அனுப்பிய உரை கலாசாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான கிம் யோங்-சாம் என்பவரால் வாசிக்கப்பட்டது.  

 

“நாம் நிறைவேற்றும் திருப்பலி காதினால் கிம்மை இழந்துவிட்டோம் என்பதற்காக மட்டுமல்ல. அன்றாடம் பல கஷ்டங்கள் மற்றும் சவால்களை நம் அனுபவித்தாலும், அவரது அன்பு மற்றும் ஒவ்வொருவருக்கும் நன்றி செல்லும் அவரது செய்தியும் நமது வாழ்வில் பதிய வேண்டும் என்பதற்காக” என்று கர்தினால் யோம் ஆற்றிய மறையுரையில் தெரிவித்தார்.

 

கர்தினால் கிம்மின் 2019ம் ஆண்டு நினைவுக்கு பல நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களை சியோல் உயர் மறைமாவட்டம் தயார் செய்துள்ளது.

Add new comment

4 + 0 =