இந்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி – பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் இம்ரான் கான்


பாலகோட் பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் முகாம்களை இந்தியா தாக்கி அழித்த அடுத்த நாள் பாகி்ஸ்தான் பதிலடி கொடுத்து்ள்ளது.

 

இந்த தாக்குதல் பாகிஸ்தானின் பகுதிக்குள் புகுந்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 

மேலும், 1971ம் ஆண்டு நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் போருக்கு பின்னர், முதல் முறையாக காஷ்மீர் எல்லை கோட்டுப்பகுதியை மீறி இந்தியா இந்த தாககுதலை நடத்தியிருந்தது.

 

இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

அவர்களின் விமானத்தை துரத்தி சென்ற இந்திய வீரர்களின் இரண்டு விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளது.

 

அதிலொரு விமானியான தமிழகத்தை சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கியுள்ளார்.  

 

மேலும், ஜம்மு பகுதிக்குட்பட்ட பூஞ்ச் மாவட்டம், மெண்டோர் பகுதியிலுள்ள இந்திய கண்காணிப்பு சாவடிகளின் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென்று நடத்திய தாக்குதல்களுக்கு இந்தியாவும் தக்க பதிலடி வழங்கி வருகின்றனர்.

 

இதனால், காஷ்மீர் பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில், அணு ஆயுத நாடுகளாக இருக்கின்ற இந்தியாவும் பாகி்தானும் தவறான கணிப்புகளோடு செயல்படக்கூடாது என்றும், அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்றும் கூறியுள்ளார்.

 

பாகிஸ்தானின் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக கூறியுள்ள இந்தியா, ஒரு விமானத்தை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Add new comment

16 + 0 =