இந்தியா தாக்குதல்: ஐநா, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் புகார் அளிக்க பாகிஸ்தான் முடிவு


இந்திய விமானப்படைகள் பாகிஸ்தானில் புகுந்து ஜெய்ஷ் -இ-முகமது முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பிடம் புகார் அளிக்க பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது.

 

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது  செவ்வாய்க்கிழமை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தின.

 

12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த தாக்குதல் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

 

இதனால் பாகிஸ்தான் ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

எனவே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் முப்படை தளபதிகள், அதிகாரிகள், அமைச்சர்கள் கூடி நடத்திய ஆலோசனைக்கு பின்னர், சரியான நேரத்தில், உரிய இடத்தில் வைத்து இந்தியாவுக்கு பதிலடி வழங்கப்படும் என்று பாகிஸ்தான் தலைமையமைச்சர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

 

பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்து இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியது எங்கள் நாட்டின் இறையான்மையை மதிக்காத செயல். பாகிஸ்தானை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வெளியுறவு அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார்.   

Add new comment

6 + 6 =