ஆபத்தான சாபத்தை தொழிற்நுட்பங்கள் உருவாக்குகின்றன – திருத்தந்தை


மனிதகுலத்திற்கு பயன்தரும் சாத்தியக்கூறுகளை தொழிற்நுட்பங்கள் கொண்டுள்ளன. ஆனால், ஆபத்துகளையும், எதிர்பார்க்காத விளைவுகளையும் இவை கொண்டுள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

அதிகரித்துள்ள தொழிற்நுட்ப திறன்களின் விரைவான பரிணமிப்பு, ஆபத்தான சாபத்தை உருவாக்குகின்றது. எடுத்துக்காட்டாக செயற்கை மதிநுட்பத்தை எடுத்துக்கொள்ளலாம்.

 

பராமரிப்பை மேம்படுத்தும் கருவியாக வாழ்க்கையை கையாளாமல் இருந்தால், கருவிகளிடம் வாழ்க்கையை ஒப்படைககின்ற ஆபத்து உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

இயந்திரங்களின் இந்த ஆக்கிரமிப்பு மிகவும் மோசமான விளைவுகளை உருவாக்கும். கருவி தன்னையே இயக்கிக்கொள்ள கட்டுப்படுத்தப்படாவிட்டால். இறுதியில் மனிதகுலத்தை கருவிகள் இயக்குகின்ற மோசமான விளைவுதான் ஏற்படும் என்று அவர் விளக்கம் அளித்து்ளார்.

 

வாழ்க்கைக்கான பாப்பிறை கழகத்தின் உறுப்பினர்களை சந்தித்தபோது இந்த கருத்துக்களை திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இந்த உறுப்பினர்கள் “எந்திர மனிதன்-அறநெறி: மனிதர்கள், இயந்திரங்கள் மற்றும் உடல் நலம்“ என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பயிலரங்கத்திலும் பங்கேற்றனர்.

 

இன்றைய நாட்களில் வேலைகளில் காணப்படும் முரண்பாடுகளை திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப திறன்களை வளர்த்து எடுக்கையில் அனைவரின் நன்மைக்காக மேம்பாடுகளை கொண்டு வந்தனர். ஆனால், சமத்துவம் இல்லாமையும், மோதல்கள் மேலும் அதிகரிப்பையும் இந்த தொழில்நுட்பம் உருவாக்கியுள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.    

Add new comment

15 + 0 =