இரண்டாவது சந்திப்புக்கு ஹனோய் சென்றடைந்த அமெரிக்க, வட கொரிய தலைவர்கள்


வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் வியட்நாம் தலைநகர் ஹனோயை சென்றடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் அந்நகரை விமானத்தில் சென்றடைந்துள்ளார்.

 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் கடந்த 2018-ம் ஆண்டு சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி முதல்முறையாக சந்தித்து பேசினர்.  

 

அந்த பேச்சுவார்த்தையின்போது கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வட கொரிய தலைவர் ஒப்புக்கொண்டனர். ஓர் உடன்பாடும் செய்து கொண்டனர்.

 

ஆனால், அதில் பெரிய முன்னேற்றம் ஒன்றும் ஏற்படவில்லை.

 

மீண்டும் அமெரைிக்க அதிபரை சந்திக்க தயாராக இருப்பதகா வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் விரும்பம் தெரிவிக்க டிரம்பும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டார்.

 

அதன் விளைவாக பிப்ரவரி 27 மற்றும் 28ம் தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் இரண்டாவது சந்திப்பு நடைபெறவுள்ளது.

 

இந்த 2வது சந்திப்பில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், அணு ஆயுதங்களை ஒழிப்பதில் முன்னேற்றம் காணப்படும் என்று நம்பப்படுகிறது.

 

ஆனால், அணு ஆயதங்களை ஒழிப்பது தொடாபாக இதுவரை வட கொரியா எந்தவொரு அறிகுறியையும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ிய விமானங்கள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு வான்பரப்பில் பறந்ததை கண்டிப்பதாக தெரிவித்துள்ளது

Add new comment

6 + 4 =