கம்யூனிஸ்ட் முன்னணி என குற்றஞ்சாட்டப்படும் பிலிப்பின்ஸ் திருச்சபை குழுக்கள்


நிழலுலக கம்யூனிட் இயக்கத்தோடு பல திருச்சபை குழுக்கள் தொடர்புகளை வைத்திரு்பபதாக பிலிப்பீன்ஸ் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

 

இந்த மாதம் ஐக்கிய நாடுகள் அவையில் சமர்ப்பித்த அறிக்கையில் இதனை பிலிப்பீன்ஸ் அரசு இதனை தெரிவித்துள்ளது.

 

பிலிப்பீன்ஸ் ஊரக மறைபரப்பு சபைகள், மின்டணாவோ  இறைநம்பிக்கை பல்சமூக சேவை அமைப்பு ஆகியவை கொரில்லா முன்னிலைகளாக குற்றஞ்சாட்டப்படும் குழுக்களில் அடங்குகின்றன. “

 

இந்த அறிக்கை, ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையரிடம் ஜெனீவாவில் பிப்ரவரி 21ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.

 

இந்த திருச்சபை குழுக்கள் கிளர்ச்சியார்களோடு இணைந்துள்ளதாகவும், பழங்குடியின குழந்தைகளை கடத்துவதில் இந்த குழுவுக்கும் பங்குளள்தாகவும் குற்றுஞ்சாட்டப்பட்டு்ளளது.

 

பிலிப்பீன்ஸ் கம்யனிஸ்ட் க்ட்சியும், அதன் ஆயுதப்பிரிவும், பிலிப்பீன்ஸின் தெற்கு பகுதியிலுள்ள மின்டணாவோவில் வாழும் பழங்குடியினருக்கு ஆயுதப்பயிற்சி வழங்குவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

 

தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணை பொது இயக்குநர் வின்சென்ட் அக்டாமாக், குழந்தைகளின் படையை உருவாக்க கிளாச்சியாளாகள் பழங்குடியின குழந்தைகளை சேர்ப்பதாக   இந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

ஆனால், இந்த பட்டியலில் ஊரக மறைபரப்பாளர்களை சேர்த்திருப்பது தீமையின் உச்சக்கட்டம் என்று பென்னடிக் சபை அருட்சகோதரி மேரி ஜான் மனான்சன் கூறியுள்ளார்.

Add new comment

1 + 15 =