அணு ஆயுத தடை மீதான பாதுகாப்பு அவசியம் – மன்மோகன் சிங்


அணு ஆயுதங்களின் மீதான தடையை பாதுகாக்க வேண்டுமென முன்னாள் இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.  

 

21ம் நூற்றாண்டில் அணு ஆயுதங்கள் என்கிற புத்தகத்தை ஒய்வுபெற்ற இந்திய வெளியுறவு பணி அதிகாரி ராகேஷ் சூத் எழுதியுள்ளார்.

 

இந்தப் புத்தகத்தின் வெளியிட்டு விழாவில் கல்நது கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சருமான மன்மோகன் சிங், உரையாற்றியபோது அணு ஆயுதங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

 

அணு ஆயுதங்களின் பயன்பாட்டை இந்தியா எப்போதும் விரும்பியதில்லை. இந்தக் கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இப்போது புதிய தொழில் நுட்பங்களின் பயன்பாட்டால் அணு ஆயுதத்துறையில் வளர்ச்சி அதிகரித்து வருகின்றது. எனவே, அணு ஆயுதங்களின் மீதான தடையை பாதுகாப்பதுதான் முக்கியமான ஒன்று என்று அவர் பேசினார்.

 

உலகளவில் இந்தியா மட்டுமே அணு ஆயுதங்களை அமைதியான முறையில் பயன்படுத்தி வந்த நாடு. மேலும், இந்தியா பல அணு ஆயுதங்களை தயாரித்திருந்தாலும் அவற்றை உபயோகப்படுத்தாமல் உறுதியாக நின்றது. அதேபோல பல ஆண்டுகளாக அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டேன் என்ற கொள்கையில் இந்தியா உறுதியாகயுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Add new comment

4 + 3 =