டெல்லியில் 40 ஏக்கரில் தேசிய போர் நினைவுச் சின்னம்


தலைநகர் டெல்லியிலுள்ள இந்தியா கேட் அருகில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தை இன்று திங்கள்கிழமை இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

 

சுதந்திரத்திற்கு உயிர் தியாகம் செய்த வீரர்கள் முதல் நாட்டிற்காக ராணுவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்கள் வரை 25,942 பேரின் பெயர்கள் இங்குள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.

 

இதன் மைய மண்டபம் 4 சக்கரங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.  

 

இந் சக்கரங்கள் ராணுவத்தின் 4 விதமான முக்கியத்துவத்தைக் குறிக்கின்றன.

 

அதற்கு நடுவிலுள்ள மற்றொரு சக்கரத்தின் மீது 15.5 மீ உயரத்தில் அணையா விளக்கு ஒன்று எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

 

இங்கு நடப்பட்டுள்ள 600க்கும் மேலான மரங்கள் சுவர் போல் நாட்டைக் காக்கும் வீரர்களை உணர்த்துகிறது.

 

எதிர்காலத்தில் ராணுவ நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த நினைவுச் சின்னத்தில் நடத்தப்படுமெனவும், அப்போது ராணுவ வீரர்கள் உடன் கலந்துரையாட வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் செயற்கை ஒலிக் காட்சிகள், நடைபயண பகுதிகள் அங்குள்ளன.

 

இந்த இடத்தைப் பார்வையிட அனுமதி இலவசம் என்றாலும்,  நேரக் கட்டுப்பாடு உள்ளது.

Add new comment

5 + 1 =