உதவிப் பொருட்கள் தடுத்து நிறுத்தம் – வெனிசுவேலாவில் மீண்டும் கலகம்


கொலம்பியா, பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வரும் உதவிப் பொருட்களை வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ தடுத்து நிறுத்தி விட்டதால் கலவரம் தோன்றியுள்ளது.

 

அந்நாட்டின் எல்லைப்புற நகரங்களில் கடும் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

உதவிப் பொருட்களை பெற வந்தவர்கள் மீதும், கொடுக்க வந்த மக்கள் மீதும் அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டையையும், ரப்பர் குண்டுகளையும் வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த கலவரத்தால் பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

 

குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபபடுகிறது.

 

உதவி பொருட்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் செல்லும் நிலையில் இதுவே பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையும் என்று மதுரோ தெரிவிக்கிறார்.

 

பொது மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு

அமெரிக்க கண்டனம் தெரிவித்துள்ளது.

 

வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராகத் தன்னைதானே அறிவித்துள்ள எதிர்க் கட்சித் தலைவரும், இந்த உதவிகளை பெற ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவருமான குவான் குவைடோ, பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Add new comment

1 + 3 =