பிரகாஷ் ராஜிக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் நிபந்தனை


பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடும் பிரகாஷ் ராஜூக்கு ஆதரவளிக்க வேண்டுமானால், அவர் காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

 

கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருபவர் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ்.

 

சமீபக்காலமாக மத்திய அரசையும், தலைமையமைச்சர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

 

குறிப்பாக, பாஜகவின் நடவடிக்கைகளை பெரிதும் சாடி வருவதால் கர்நாடகாவில் அக்கட்சியினர் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

 

நாடாளுமன்ற தேர்தலில்  பிரகாஷ்ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

 

பொது வேட்பாளராக அறிவித்து, மதச்சார்பற்ற கட்சிகள் தனக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

ஆம் ஆத்மி கட்சி மட்டுமே ஆதரவு அளித்துள்ள நிலையில், . காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரிய பிரகாஷ் ராஜூக்கு இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 

Add new comment

11 + 0 =