அனில் அம்பானி குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு


எரிக்சன் நிறுவனத்திடம் பெற்ற தொகையை திரும்பிச் செலுத்தாத ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியை உச்சநீதிமன்றம் குற்றவாளி என கூறியுள்ளது.

 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு சாதனங்கள் வாங்குவதற்காக எரிக்சன் நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்றிருந்தது.

 

கடனைத் திருப்பி கொடுக்காமல் ரிலையன்ஸ் குழுமம் ஏமாற்றி வந்துள்ளது.

 

மொத்தம் ரூ.550 கோடி கடன் பாக்கியை பெற்றுத்தர எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

 

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ரூ.550 கோடி பணத்தை எரிக்சன் நிறுவனத்துக்கு வழங்க உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

 

அதிலும், சிறு அளவ தொகையை மட்டும் வழங்கிய ரிலையன்ஸ், மீதி தொகையை கொடுக்காமல் ஏமாற்றியது.

 

பதன்கிழமை இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அனில் அம்பானி உள்ளிட்ட 3 பேரை குற்றவாளி என அறிவித்தது.

 

நிலுவைத் தொகையான 453 கோடியை 4 வாரத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் இல்லையென்றால் 3 மாதத் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

 

நீதிமன்ற ஆணையை நிறைவேற்றாமல் அவமதித்தற்காக ரிலையன்ஸ் உள்ளிட்ட 3 நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது

Add new comment

3 + 0 =