தமிழ் நாட்டில் கூட்டணிகள் அறிவிப்பு, எதிர்பார்ப்பு என்ன?


மக்களவை தேர்தலுக்கான அதிமுக தலைமையிலும், திமுக தலைமையிலும் இரண்டு முக்கிய கூட்டணிகள் தமிழ் நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

அதிமுகவின் தலைமையில் பாஜக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சிகள் இணைந்துள்ளன.

 

திமுக தலைமையில் காங்கிரஸ் கூட்டணி அளிவிக்கப்பட்டுள்ளது.

 

பாமகவுக்கு ஏழு தொகுதிகழளயும், பாஜகவுக்கு ஐந்து தொகுதிகளையும் ஒதுக்கி அதிமுக அறிவித்துள்ளது.

 

பிப்ரவரி 20ம் தேதி காங்கிரஸூக்கு புதுச்சேரி உள்ளிட்ட 10 இடங்களை திமுக ஒதுக்கி கூட்டணியை அறிவித்துள்ளது.

 

மேலும், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இரண்டு இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவையும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் அதிமுகவோடு நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு அறிவிக்கப்படவில்லை.

 

திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் முறையாக நடைபெறும் தேர்தல் இதுவாக இருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு திமுக தரப்பில் எழுந்துள்ளது.

 

எது வெற்றி கூட்டணியாக அமையும் என்பதை அறிய மக்களவை தேர்தல் முடிவது வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

Add new comment

5 + 13 =