தீவிரவாதத்தால் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு காங்கிரஸ் ஆறுதல்


நாங்களும் சிறு வயதிலேயே எங்கள் தந்தையை தீவிரவாதத்தால் இழந்தோம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தியும், பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தியும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.  

 

கடந்த 14ம் தேதி ஜம்மு காஷ்மீா் மாநிலம் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் சிஆா்பிஎப் வீரா்கள் 40 போ் உயிரிழந்தனர்.

 

உலக நாடுகள் பலவும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

 

காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தியும், பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தியும் புல்வாமா தாக்குதலால் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனா்.

 

உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்த அமித் குமார் ஜோரியின் வீட்டிற்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்.

 

ராணுவ வீரரின் குடும்ப உறுப்பினா்களுடன் பேசுகையில், உங்களது வலி எனக்கு புரிகிறது. நானும் இளம் வயதில் தீவிரவாதத்தால் எனது தந்தையை இழந்தேன். காங்கிரஸ் கட்சியும் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.

 

உங்கள் சோகம், உணா்ச்சிகளை புரிந்துகொளிகிறோம். நாங்கள் மட்டுமல்ல தேசமே உங்களுக்கு ஆதரவு அளிக்கிறது. தனிமையாகிவிட்டோம் என உணர வேண்டாம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Add new comment

8 + 2 =