டிரம்புக்கு எதிராக 16 மாநிலங்கள் வழக்கு


அமெரிக்க மெக்ஸிகோ எல்லையில் தடுப்பு சுவரை அமைப்பதற்கு நாடாளுமன்ற அதிகாரத்தை தாண்டி நிதியை ஏற்பாடு கிடைக்க செய்ய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவசர நிலையை அறிவித்துள்ளார், 

 

ஆனால், இதற்கு எதிராக 16 மாநிலங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.

 

அதிபர் டிரம்புக்கு இவ்வாறு செயல்பட அதிகாரம் இல்லை என்று இந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளன.

 

அமெரிக்கா – மெக்சிகோ இடையே தடுப்புச் சுவரை கட்டுவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காவிட்டால் நாட்டில் அவசர நிலையை அறிவிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னதாகத் தெரிவித்து இருந்தார்.

 

சட்டவிரோதமாக மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் அகதிகள் நுழைவதை தடுக்க இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய தடுப்புச் சுவரை கட்டுவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியாக இருந்தார்.

 

இதற்காக 5 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கும்படி டிரம்ப் நிர்வாகம் நாடாளுமன்றத்தை கேட்டுக் கொண்டது.

 

இதற்கு நிதியை ஒதுக்க எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எதிர்த்தது.

 

எனவே முழு நிதி கட்டுப்பாட்டையும் அதிபர் எடுத்துககொள்ள விரும்பி அவசர நிலையை டிரம்ப் அறிவித்துள்ளார்.  

 

தற்போது, அவசர நிலையை அறிவித்த அதிபர் டிரம்ப்புக்கு எதிராக நியுயார்க் உள்பட 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.

 

சட்ட நடவடிக்கை மூலம் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Add new comment

5 + 7 =