புல்வாமா தாக்குதலுக்கு நியூசிலாந்து கண்டனம்


காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் இந்திய பாதகாப்பு படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நியூஸிலாந்து கண்டனம்  தெரிவித்துள்ளது.

 

ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்திய துணை ராணுவப்படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர்.

 

இந்த சம்பவம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சி அளித்தது.

 

இந்தத் தாக்குதல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிவரும் முரண்பாடுகள் மேலும் அதிகமாகி மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

 

இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது நியூஸிலாந்து புல்வாமா தாக்குதலுக்கு கண்டனத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

 

இந்திய மத்தியப் பிரிவு பாதுகாப்பு படையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை நியூசிலாந்து கண்டிக்கிறது. ஆழ்ந்த வருத்தங்களை இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்குத் துணை நிற்போம் என்று நியூசிலாந்து தெரிவித்துள்ளது.

Add new comment

12 + 4 =