அமெரிக்காவுக்கு இந்தியா சிவப்பு கம்பள வரவேற்பு


அமெரிக்காவில் இருந்து நாள்தோறும் 30 லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிற ஒப்பந்தத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

 

ஈரான் நாட்டிலிருந்துதான் இந்தியா அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது.

 

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட மோதலால் அமெரிக்கா ஈரான் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

 

அமெரிக்காவின் தடைகளால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவுக்கு விற்கும் கச்சா எண்ணெய் விலையை ஈரான் உயர்த்தியது.

 

எனவே, அமெரிக்காவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவு செய்தது.

 

நாள்தோறும் 30 லட்சம் டன் அல்லது 60 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய்யை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் வகையில் அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் இந்தியன் ஆயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

 

இந்த ஒப்பந்தம் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைமுறைக்கு வரும் என இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் சிங் தெரிவித்திருக்கிறார்.

 

பாதுகாப்பு காரணங்களை காட்டி அமெரிக்க நிறுவனத்தின் பெயரை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

Add new comment

7 + 11 =