பிலிப்பீன்ஸ் தேர்தலை கண்காணிக்கும் கத்தோலிக்க வாக்கு அமைப்பு


வரும் மே மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களை திருச்சபையின் வாக்கு கண்காணிப்பு நிறுவனம் கண்காணிப்பதற்கு பிலிப்பீன்ஸின் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

 

இந்த நிறுவனம், கடந்த தேர்தல்களில் கண்காணிப்பு நடத்தியதில் பங்கு மேய்ப்புப்பணி கவுன்சில் வாக்கெடுப்பு பதிவேடு வைத்திருப்பதையும், தேர்தல் தொடர்பான செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டு இந்த பொறுப்பை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

 

பொது நன்மையை வளர்ப்பதில் திறனை காட்டியுள்ளதால், தேர்தல் ஆணையம் அதன் நிகழ்வுகளிலும், செயல்பாடுகளிலும் உதவி செய்ய திருச்சபையின் வாக்கு கண்காணிப்பு நிறுவனத்தை கோரியுள்ளதாக அது கூறியுள்ளது.

 

மேற்பார்வை, உரிமைகள் பாதிப்பு மற்றும் உரிமைகளை செயல்படுத்துவதில் விழிப்பான செயல்பாட்டை திருச்சபையின் வாக்கு கண்காணிப்பு நிறுவனம் வெளிக்காட்டியுள்ளதால் இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக தோதல் ஆணையம் கூறியுள்ளது.

 

சட்ப்பூர்வமற்ற முறையில் வாக்கு பட்டியலில் இடம்பெற்றிருப்போரை அகற்றுவது, அரசியல் பரப்புரை நடத்தை மீறல்கள், தேர்தல் பிரசார செலவுகள், பதிவு செய்த எல்லா வாக்காளர்களையும் வாக்களிக்க ஊக்குவிப்பது ஆகியவை இந்த திருச்சபையின் வாக்கு கண்காணிப்பு நிறுவனத்தின் பணிகளாக இருக்கும்.

Add new comment

1 + 4 =