ஏமனில் போர்நிறுத்தத்திற்கு உடன்பாடு - ஐநா


ஏமன் அரசும், ஹூதி கிளர்ச்சியாளர்களும் போர்நிறுத்தத்துக்கு உடன்படுவதற்கு சம்மதித்துள்ளதாக ஐ. நா. தகவல் வெளியிட்டுள்ளது.

 

ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடந்தி வருகிறது.

 

பலமுறை இந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும். மீண்டும் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு அரசும், ஹூதி கிளர்ச்சியாளர்களும் ஒப்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

ஹடேடோ துறைமுகப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்ததுக்கு ஏமன் அரசு மற்றும் ஹூதி கிளர்சியாளர்களும்  ஒப்புக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக இங்க தேவையான உணவையும், மருத்துவ வசதிகளும் மக்களுக்கு விரைவில் வந்து சேருமென நம்புவதாக ஐநா தெரிவித்துள்ளது.

 

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

 

அரசுக்கு ஆதரவாக சௌதி அரேபியா செயல்படும் நிலையில், ஹூதி கிளர்ச்சிப் படைக்கு ஆதரவான ஈரான் உள்ளது.

 

இப்போரில் 11 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குழந்தைகள்.

Add new comment

4 + 13 =