உலகிற்காக அல்ல, விண்ணகத்திற்காக வாழுங்கள் - திருத்தந்தை


உலகிற்காக அல்ல, விண்ணகத்திற்காக வாழுங்கள் என்பதை அனைத்து புனிதர்களின் தின செய்தியாக திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கியுள்ளார்.

 

விண்கத்திற்கு ஒருவர் சென்றடைய வேண்டுமென்றால், உலக இன்பங்களுக்காக ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கிறாரா அல்லது தங்களின் முழு வலிமையோடு புனித தன்மையை பெறுவதற்கு முயற்சித்து கொண்டிருக்கிறாரா என்று தங்களையே கேட்டு கொள்ள வேண்டும் என்று அனைத்து புனிதர்கள் விழா நாளில் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

எந்த பக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நாமே கேட்டு கொள்வோம். விண்ணகமா, உலகமா? கடவுளுக்காக வாழ்கிறோமா, நமக்காகவா? முடிவற்ற இன்பத்திற்காகவா, அல்லது தற்போதைய தற்காலிக இன்பத்திற்காகவா? என்று அவர் கேள்வி எழுப்பி விளக்கியுள்ளார்.

 

புனிதம் பெற விரும்பினால், கடவுளில் நம்பிக்கை கொண்டு, பிறரை மதித்து நடக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Add new comment

3 + 0 =