சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவோம் - இந்தியா


ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாரில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படையினர் உயிரிழந்தற்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக மறுக்கமுடியாத ஆதாரம் கிடைத்திருக்கிறது என்று இந்தியா கூறியுள்ளது.

 

இதன் காரணமாக சர்வதேச அளவில் பகக்கத்து நாடான பாகிஸ்தானை முற்றிலும் தனிமைப்படுத்துவதற்கு அவசியமான எல்லா நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் எனற தெரிவிக்க்பபட்டுள்ளது.

 

கடந்த வியாழ அன்று 70 ராணுவ வாகனங்களில் சென்ற 2,500 மத்திய ரிசர்வ் காவல் படையினர் சென்றபோது வெடிபொருள் நிரப்பிய மகிழ்வுந்தை வெடிக்க செய்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

இதனை தாங்களே நடத்தியதாக பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-ஈ-மொஹமத் அமைப்பு அறிவித்துள்ளது.

 

கடந்த 30 ஆண்டுகளில் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிரதேசத்தில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

 

இந்தியாவின் இந்த கூற்றுக்கு பதிலாக, இந்த தாக்குதல் நடைபெற்றதால், மிகுந்த கவலை அடைந்திருப்பதாகவும், இதற்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், தீவிரவாத குழுவான ஜெய்ஷ்-ஈ-மொஹமத் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து நோட்டீஸ் வழங்கி இந்தியா கூறியுள்ளது.

 

Add new comment

10 + 6 =