பாதிக்கப்பட்ட பகுதிக்கு நம்பிக்கை ஊட்டும் வியட்நாமின் புதிய மாவட்டம்


வியட்நாமின் வடமத்திய பகுதியில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு்ளள மறைமாவட்டம் அங்குள்ள மக்களுக்கு நல்ல வாய்ப்புக்களையும், நீதியையும், அமைதியையும் கொண்டு வரும் என்று திருச்சபையின் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

இந்த பகுதி இயற்கை சீற்றங்களால் மிகவும் பாதிக்கப்படும் பிரதேசமாகும்.

 

வியட்நாமின் பாப்பிறை பிரதிநிதியான பேராயர் மாரெக் சாலெவ்க்கி பிப்ரவரி 11ம் தேதி நடைபெற்ற விழாவில் தலைமை தாங்கி ஹா டின்க் மறைமாவட்டத்தை நிறுவி அதன் முதலாவது ஆயராக பால் நகுயன் தாய் ஹோப்-பை திருப்பொழிவு செய்துள்ளார்.

 

வான் கான்க் கத்தீட்டிரலில் நடைபெற்ற இதற்கான சிறப்பு வழிபாட்டில் 30 பேராயர்கள், நூற்றுக்காணக்கான அருட்தந்தையர் உள்ளூர் அரசு பிரதிநிதிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுநிலையினர் பங்கேற்றனர்.

 

வின்க மறைமாவட்ட ஆயர்கள் மற்றும் கத்தோலிக்கர்களால் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த ஹா டின்க் புதிய மறைமாவட்டம் தோன்றியிருப்பதில் வியட்நாமிலுள்ள கத்தோலிக்க திருச்சபை மிகவும் மகிழ்ச்சி அடைகிறது என்று ஹனோய் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் ஜோசப் வு வான் தியன் கூறியுள்ளார்.

 

புதிதாக தோன்றியுள்ள இந்த மறைமாவட்டம் உள்ளூர் திருச்சபையில் இறைநம்பிக்கையின் வளர்ச்சியை அடையாளப்படுத்துவதோடு, கடவுளில் நம்பிக்கையையும், பிற மறைமாவட்டங்களோடு ஒன்றித்து நெருங்கி வாழ்வதையும், மறைபரப்பையும் வளர்கின்ற சூழ்நிலையை உருவாக்கும் என்று பேராயர் வான் தியன் கூறியுள்ளார்.

 

மேலும் கூறுகையில், இரண்டு லட்சத்து 78 ஆயிரத்து 559 கத்தோலிக்கர்களை கொண்டு்ள்ள ஹா டின்க் மற்றும் குயாங் பின்க் மாகாணத்தை உள்ளடக்கும் இந்த புதிய மறைமாவட்டம் இந்த மறைமாவட்ட மக்கள்தொகையில் 13 சதவீதத்தினருக்கு ஆன்மிக சேவையை 135 அருட்தந்தையர், 207 துறவறத்தார் மற்றும் 56 குருமாணவர்களின் உதவியோடு வழங்கும் என்றார்.

 

தங்களின் உலர்ந்த மற்றும் மோசமான நிலத்தில் கடினமான நிலைமைகளை எதிர்கொண்டாலும் நீண்டகாலமாக கத்தோலிக்க இறைநம்பிக்கைக்கு சாட்சியம் அளிப்பவர்களாக இந்த உள்ளூர் மக்கள் வாழ்ந்து வந்துள்ளதாக பேராயர் வான் தியன் குறிப்பிடடுள்ளார்.  

Add new comment

2 + 8 =