ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் தூத்துக்குடி படைவீரர் பலி


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்ததில், தமிழகத்தின் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் வீரமரணம் அடைந்திருக்கிறார்.

 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் ரத்னிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.

 

அந்த பகுதியை பாதுகாப்பு படைவீர்ரகள் சுற்றி வளைத்து தாக்கியதில்,. பாதுகாப்பு படை வீரர்கள் பலர் வீரமரணம் அடைந்தனர்.

 

300 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை எஸ்சுவி காரில் ஏற்றி வந்த ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதி சிஆர்பிஃஎப் வாகனத்தின் மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் பலியாயினர்.

 

இந்த தாக்குதலில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், சவலப்பேரியை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் சுப்பிரமணியனும் உயிரிழந்தார்.

 

இவரது மரணத்தால் குடும்பமும், சவலப்பேரி மக்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Add new comment

1 + 17 =