அமலாக போகும் பொது சேவைக்கு ஒரே தொலைபேசி


அவசர ஊர்தி, தீ விபத்து, காவல்துறை புகார்கள் உள்ளிட்ட அனைத்து அவசர தேவைக்காக 112 என்ற ஒரே தொலைப்பேசி அழைப்பு எண் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

 

தமிழகம் உட்பட நாட்டின் 14 மாநிலங்களில் வரும் 19ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரவுள்ளது.

 

பல அவசர தேவைக்கு ‘911’ என்ற எண்ணை பயன்படுத்தும் நடைமுறை அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளது.

 

அதே நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்ற இந்த முடிவு எடுக்கபபட்டுள்ளது.

 

மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்து வந்த நடவடிக்கையில் ‘112’ என்ற ஒரே உதவி எண் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

 

இப்போது பல்வேறு துறைகளின் உதவியை பெறுவதற்கு பல வேறுபட்ட எண்கள் பயன்பாட்டில் உள்ளன.

 

இந்த திட்டத்தை செயல்படுத்தும் மாநிலங்களில், சிறப்பு அவசர உதவி மையம் உருவாக்கப்படும். அவசர தேவை அழைப்புகளை கையாள பயிற்சி பெற்ற ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

 

அவசர உதவி மையங்கள் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்துடனும், அவசர உதவி வாகனங்களுடனும் இணைக்கப்பட்டு இருக்கும்.

 

இந்த திட்டம் நாகலாந்து, ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் செயல்பாட்டில் இருக்கின்றன.

 

தமிழ்நாடு உட்பட கேரளா, ஆந்திரா, தெலங்கானா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உட்பட 14 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகமாகவுள்ளது.

 

பின்னர், நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது.

Add new comment

5 + 3 =