ஆசியாவில் நான்கு நூற்றாண்டு சேவையை கொண்டாடிய கார்மல் சபையினர்


ஆசியாவில் 400 ஆண்டுகள் சேவை செய்துள்ளதை ஒரு வார கொண்டாட்டத்தை கார்மல் சபையினர் கொண்டாடியுள்ளனர்.

 

தங்களின் சேவை பயணத்தை தொடங்கிய போர்ச்சிகீசிய இந்திய காலனியாகிய பழைய கோவாவில் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றி கார்மல் சபையினர் இதனை கொண்டாடியுள்ளனர்.

 

உலக அளவிலான தலைவர்கள் உள்பட சர்வதேச கார்மல் சபையை சேர்ந்த 200க்கும் அதிகமான அருட்தந்தையர் பிப்ரவரி 10ம் தேதி சி கத்தீட்ரலில் நடைபெற்ற கொண்டாட்ட திருப்பலியில் பங்கேற்றனர்.  

 

1985ம் ஆண்டு அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட கார்மல் சபை அருட்தந்தையர் மற்றும் மறைச்சாட்சியரின் கல்லறையில் மலர் வளையங்கள் வைக்கப்பட்டன.

 

1604ம் ஆண்டு திருத்த்நதை எட்டாம் கிளெமண்ட கார்மல் சபையினரை பிரதிநிதித்துவப்படுத்திய பின்னர், 1619ம் ஆண்டு கார்மல் சபையினர் கோவா வந்தடைந்தனர்.

 

முடிவுகள் எடுக்கின்ற கார்மல் சபையினரின் கூட்டமான ஒரு வார சிறப்பு பொது அமர்வு இந்த கொண்டாட்ட நிகழ்வுகளில் உள்ளடங்குகிறது.

 

நோக்கம், வழிமுறை மற்றும் பணியின் பிரகடண தலைப்புகள் என்ற மையக்கருத்தில் இந்த மாநாடு நடத்தப்படுவதை இந்த சபையின் உலக தலைவர் அருட்தந்தை சவிரோ கான்னிஸ்டிரா கூறியுள்ளார்.

 

பல்வேறு மொழிகளில் முன்செல்லும் வழிகள் பற்றி கார்மல் சபையை சேர்ந்த 73 மூத்த உறுப்பினர்கள் விவாதங்களில் கலந்து கொண்டனர்.  

Add new comment

1 + 3 =