போராட்டத்தை தொடர மைட்சோன் அணை எதிர்ப்பு தலைவர் உறுதி


மைட்சோன் அணை திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை ஏற்பாடு செய்த கத்தோலிக்க பெண் ஒருவருக்கு அமைதியான நாடாளுமன்ற சட்டத்தை மீறியதாக மியான்மரின் காச்சின் மாநில நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது.

 

பிப்ரவரி 7ம் தேதி நடைபெ்றற போராட்டத்தின்போது ஒலிப்பெருக்கியை பயன்படுத்தியும், அதிகாரபூர்வமற்ற சுலோகங்களை முழங்கி போராடியதற்காக பெர்னாடிற்றே ஜா காவ்ங்-க்கு பத்தாயிரம் கயாட்ஸ் அபராதம் விதிக்கப்பட்டு்ளளது. 

 

நான் காச்சின் மக்களுக்காக மட்டுமல்ல, நாடு முழுவதும் வாழ்வோருக்காக போராடுகிறேன். எனவே, எத்தகைய சவால் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று ஜா காவ்ங் கூறியுள்ளார்.

 

இராவ்டி ஆற்றை பாதுகாக்கவும், சீனாவின் ஆதரவோடு கட்டப்படும் அணை திட்டத்தை நிரந்தரமாக நிறுத்தி விடவும் மியான்மரிலுள்ள மக்கள் அனைவரின் கரங்களும் இணைய வேண்டுமென அவர் அழைப்பு விடுத்து்ளளார்.

 

இந்த மிக பெரிய அணைத்திட்டத்திற்காக அவரது தாங்பிரி கிராமத்தை விட்டு 2010ம் ஆண்டு குடிபெயர கட்டாயப்படுத்தப்பட்ட ஜா காவ்ங், காச்சின் மாநிலத்தில் இந்த அணை கட்டுவதற்கு எதிரான போராட்டத்தை விட்டுவிட போவதில்லை என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Add new comment

2 + 0 =