ஏழை விவசாயிகளுக்கு உதவி திட்டம் பிப்ரவரி 24ம் தேதி தொடக்கம்


ஏழை விவசாயிகளுக்கு உதவும் வகையில் தலைமையமைச்சரின் பெரிலான விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தை இந்த மாதம் 24ம் தேதி நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

 

விரைவில் வரவுள்ள தேர்தலை கருத்தில் கொண்டு விவசாயிகளின் கோபத்தை தணிக்கும் நோக்கத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

 

இதன்படி 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை மூன்று தவணையாக வங்கி கணக்கில் செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டது.

 

இந்த திட்டத்தை உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடக்கும் விவசாயிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, முதல் தவணையாக ரூ.2,000 வழங்கும் திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.

 

இந்த திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிகிறது.

Add new comment

2 + 9 =