ஏமன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தீர்மானம்


ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

 

தென்மேற்கு ஆசியாவிலுள்ள ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த மன்னர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015 மார்ச் மாதம் தொடங்கி உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

 

இதில் மன்னர் மன்சூருக்கு ஆதரவாக சௌதி அரேபியா செயல்படுகிறது. ஹூதி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது..

 

ஏமன் அரசோடு சேர்ந்து சௌதி நடத்தி வரும் தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது.

 

ஏமனிலிருந்து அமெரிக்கா படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று உலக நாடுகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றன.

 

இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற அவையில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருகின்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இராக் மற்றும் சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்ற ஆர்வமாக இருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏமனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவது பற்றி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

Add new comment

6 + 3 =