ரைஃபிள்கள் வாங்க அமெரிக்க நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம்


SIG 716 வகை நவீன ரக ரைஃபிள்கள் வாங்குவதற்கு அமெரிக்காவிலுள்ள சிக் சாயர் நிறுவனத்துடன் இந்திய ராணுவம் ஒப்பந்தம் செய்துள்ளது.  

 

பிப்ரவரி 12ம் தேதி கையெழுத்திடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

விரைவுக் கொள்முதல் அடிப்படையில் 72,400 நவீன ரைபில்களை வாங்க அமெரிக்க நிறுவனமான சிக் சாயருடன் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதற்கான உத்தேச தொகை ரூ.3,547 கோடியாகும்.  பெரிய ரைபில்கள் 7.63மிமீ, கார்பைன்கள் 5.56 மிமீ அளவு கொண்டதாக இருக்கும்.

 

இந்த ரைபில்கள் கடற்படையினர், இந்திய விமானப்படையினர் என பல்வேறு பிரிவினருக்கும் பிரித்து விநியோகிக்கப்படும்.

 

ஓராண்டில் எல்லா ரைபில்களும் இந்தியாவிடம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

6 + 0 =