கா்ஷ்மீர் தாக்குதல் – எல்லை பாதுகாப்பு படையினர் 45 பேர் பலி


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலுள்ள புல்வாமா மாவட்டத்தில் நிகழ்ந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படையினர் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவராவார்.

 

லேத்போரா என்ற இடத்துக்கு அருகில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வாகனங்கள் சென்றபோது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

 

 

31 பேர் கொல்லப்பட்ட, ஜம்மு அருகே கலூசாக் ராணுவ தளம் மீது 2002இல் நடத்தப்பட்ட தாக்குதலே இந்தியப் பாதுகாப்பது படையினர் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இதுவரை இருந்து வந்தது.

 

மகிழ்வுந்தில் குண்டுகள் நிரப்பி நிகழ்த்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

 

இந்த தாக்குதலுக்கு இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகம் வீண் போகாது என்று அவர் கூறியுள்ளார்.

 

 

சிஆர்பிஎப் ஜவான்களின் உயிர்களைக் குடித்த பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சோகமான தருணத்தில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருக்கிறோம், அவர்களுக்கு பிரார்த்தனை செய்கிறோம் என்று காங்கிரஸ் கட்சி ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செய்தி வெளியிட்டுள்ளது.

 

இதுவொரு கோழைத்தனமான தாக்குதல் என்று கூறியுள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இறந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ம்ககள் தோள் கொடுப்பார்கள் என்று கூறியு்ளளார்.

 

இந்த தாக்குதல் கோழைத்தனமானது. இறந்தோர் அனைவரின் கும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து்ளளார்.

Add new comment

1 + 0 =