கிறிஸ்தவம் பரவிய 500வது ஆண்டை கொண்டாடிய வங்கதேசம்


முற்கால மறைபரப்பாளர்கள், மறைச்சாட்சிகள், மரியன்னைக்கு மரியாதை செலுத்தி, தங்கள் நாட்டில் கிறிஸ்தவம் பரவிய 500 ஆண்டை ஆயிரக்கணக்கான வங்கதேச கிறிஸ்தவர்கள் கொண்டாடியுள்ளனர்.

 

சிட்டாகாங் உயர் மறைமாவட்டத்திலுள்ள பிரபல டியாங் லுர்து மாதா தோவலயத்திற்கு திருயாத்திரை செல்லும் வேளையில், இந்த கொண்டாட்ட விழாவும் நடைபெற்றுள்ளது.

 

பிப்ரவரி 7, 8 ஆகிய நாட்கள் நடைபெற்ற இரண்டு நாட்கள் நிகழ்ச்சியில் 11 ஆயர்கள், 75 அருட்தந்தைகள், 18 அருட்சகோதரர்கள் மற்றும் 80 அருட்சகோதரிகள் பங்கேற்றனர்.

 

1607ம் ஆண்டு டியாங் பழைய கல்லறையில் புகைப்பட்டுள்ள முற்கால கிறிஸ்தவ மறைசாட்சிகளுக்கு பிப்ரவரி 7ம் தேதி மரியாதை செலுத்தப்பட்டது.

 

முந்தைய அராகான் பேரரசை சோந்தவரும், தற்போதைய மியான்மரின் வடக்கிலுள்ள ரக்கைன் மாநிலத்தின் சிப்பாய்கள்தான் ஒரு நூற்றாண்டில் 600 போர்ச்சுகீசிய கிறிஸ்தவர்களை கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

1602ம் ஆண்டு அராகான் பேரரசின் கைகளால் இயேசு சபை அருட்தந்தை பிரான்சிஸ்கோ பெர்னாண்டஸ் மறைசாட்சியாக கொல்லப்பட்டதை தொடாந்து இந்த படுகொலைகள் தொடங்கின.

 

சிட்டகாங் மற்றும் டியாங்கில் முதல் கத்தோலிக்க மறைபரப்பாளராக அருட்தந்தை பிரான்சிஸ்கோ பெர்னாண்டஸ் காலடி வைத்த 4 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த படுகொலை நிகழ்ந்தது.

 

இந்தியாவின் கோவா மாநிலத்திற்கு கிறிஸ்தவ வணிகர்கள் வந்த 80 ஆண்டுகளுக்கு பின்னர், போர்ச்சுகீசிய குழு ஒன்று சிட்டகாங் துறைமுகத்தில் 1517ம் ஆண்டு தரையிறங்கியது.

 

அதன் பின்னர் அந்த பகுதியில் கிறிஸ்தவ குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.

 

1845ம் ஆண்டு மேற்கு வங்க வட்டாத்தின் இருக்கையாக சிட்டகாங்கை (1886-1927) வத்திக்கான் உருவாக்கியது.

 

சிட்டகாங் மறைமாவட்டத்தை உருவாக்கிய பின்னர் 1927ம் ஆண்டு டாக்கா மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டில் சிட்டகாங் வந்தது. 2017ம் ஆண்டு உயர் மறைமாவட்டமாக ஆக்கப்பட்டது.

Add new comment

12 + 6 =