கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு காவல் மையம் மீண்டும் திறக்கப்படும் - ஆஸ்திரேலியா


கிறிஸ்துமஸ் தீவிலுள்ள தடுப்புக் காவல் மையம் மீண்டும் திறக்கப்படும் என்று ஆஸ்திரேலிய தலைமையமைச்சர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.

 

அதிகரித்து வரும் அகதிகளின் எண்ணிக்கையை சமாளிப்பதற்காக இந்த முடிவை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

 

நரூ மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை சிகிச்சைக்காக உள்நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு மருத்துவர்களுக்கு வழங்குவதை ஆதரித்து, அந்நாட்டு நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. 

 

இந்த மசோதா தோல்வி வரலாற்று முக்கியத்துவமிக்கதாகும்.

இந்த தோல்விக்கு பின்னர்தான் தலைமையமைச்சர் ஸ்காட் மாரிசன் இந்த கருத்தை தெரிவித்து்ளளார்.

 

இத்தகைய சட்டம் ஆஸ்திரேலியா அமல்படுத்தி வருகின்ற மிக கடுமையான எல்லை கொள்கைகளை பலவீனப்படுத்திவிடும் என்றும்,  ஆள்கடத்தல்கார்களை பலப்படுத்திவிடும் என்றும் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார்.

 

ஆஸ்திரேலியா அகதிகள் தஞ்சம் கோரிக்கையில் மிகவும் கடுமையாக இருந்து வருவது குறித்து பல நாடுகள் கண்டனம் தெரிவித்து்ளளன.

Add new comment

4 + 12 =